4 பேர் கும்பலால் 22 வயது இளம்பெண் கூட்டுப்பலாத்காரம்; தேனியில் பயங்கரம்.!
4 பேர் கும்பலால் 22 வயது இளம்பெண் கூட்டுப்பலாத்காரம்; தேனியில் பயங்கரம்.!

3 குழந்தைகளுக்கு தாயான பெண்ணை லிப்ட் தருவதாக கூறி அழைத்து சென்று மிரட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்திற்கு, நேற்று வருகை தந்த 22 வயது இளம்பெண் ஒருவர், காவல்துறையினரிடம் 4 பேர் கும்பல் தன்னை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துவிட்டது என கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கால்துறையினர், தேனி அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு விபரத்தை தெரியப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தவெக நிர்வாகிகள் நியமனத்தில் தொடரும் சர்ச்சை.. மகளிர் அணி பரபரப்பு குமுறல்.!
தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் பெண்ணிடம் விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், பெண்ணுக்கு திருமணம் முடிந்து தற்போது 3 குழந்திகள் இருக்கின்றனர். இவர் கணவருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பழனிசெட்டிபட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, பெண்ணுக்கு அறிமுகமான ஆட்டோ ஓட்டுநர், அவருடன் இருந்தவர் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
கூட்டுப்பாலியல் வன்கொடுமை
அவர்கள் பெண்ணை வீட்டில் கொண்டு சென்று விடுவதாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர். பின் அங்கிருந்து மிரட்டி அல்லிநகரம் பெண்ணுக்கு அழைத்துச் சென்றனவர்கள், கூடுதலாக 2 பேரை சேர்த்துக்கொண்டு நால்வராக கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின் பெண்ணை வேறொரு இடத்தில் இறக்கிவிட்டு நிலையில், அவர் காவல் நிலையம் வந்து இருக்கிறார் என்பது தெரியவந்தது.
பெண் கொடுத்த புகார் மற்றும் அவர் தெரிவித்த அடையாளங்களை வைத்து ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பெண்ணுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: திருமணமான சில நாட்களில் விபரீதம்; புதுமணப்பெண் தற்கொலை.!