பேருந்து - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 5 பேர் பலி., பதறவைக்கும் காட்சிகள்.!
பேருந்து - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 5 பேர் பலி., பதறவைக்கும் காட்சிகள்.!

திருத்தணியில் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, கேஜி கண்டிகை பகுதியில், பெட்ரோல் பங்க் அருகே, இன்று அரசுப் பேருந்து - டிப்பர் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பாண்டுரங்கன் (வயது 60), சிவானந்தம் (வயது 53), மகேஷ் (வயது 40), முரளி (வயது 38) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கார் - கண்டைனர் லாரி மோதி சோகம்; 2 கல்லூரி மாணவர்கள் பலி.!
மேலும், 28 பயணிகள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர், உயிரிழந்தோருக்கு ரூ. 3 இலட்சம், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.1 இலட்சம், லேசான காயம் அடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு இருக்கிறார்.
விபத்தின் சிசிடிவி கேமிரா காட்சிகளும் வெளியாகி வைரலாகி வருகின்றன. நெஞ்சை பதறவைக்கும் நிகழ்வு அதில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கோவை: பெற்றோர் பேச்சை கேட்காததால் விபரீதம்.. 17 வயது நண்பர்கள் சாலை விபத்தில் பலி..!