தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரவசத்துக்கு அவசர சிகிச்சை கிடைக்காமல் பெண் பலி? அண்ணாமலை குற்றச்சாட்டு.. திமுக அரசுக்கு கண்டனம்.!

பிரவசத்துக்கு அவசர சிகிச்சை கிடைக்காமல் பெண் பலி? அண்ணாமலை குற்றச்சாட்டு.. திமுக அரசுக்கு கண்டனம்.!

in Thoothkudi a Woman Dies by Suicide  Advertisement

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஷகீரா, அரசு ஆரம்ப சுகாதார நிலையில் உரிய பிரசவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தார் என கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பான செய்திகள் வெளியாகி கடும் அதிர்வலை ஏற்பட்டு இருக்கிறது. 

இந்நிலையில், ஷக்கீராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், "தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட, சிறுபாடு கிராமத்தைச் சேர்ந்த ஷாகிரா என்ற பெண், மருத்துவர்கள் இல்லாத நிலையில், முறையான சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதையும் படிங்க: தூத்துக்குடியை பதறவைத்த தாய்-மகள் கொலை விவகாரம்.. குற்றவாளி சுட்டுப்பிடிப்பு.!

Thoothukudi

மருத்துவர்கள் பற்றாக்குறை

தமிழகத்தில் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. அரசு ஆரம்ப சுகாதார மையங்களில், 1,467 மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து, கடந்த 07.01.2025 அன்று கேள்வி எழுப்பியிருந்தோம். இதனை அடுத்து, தமிழகத்தில் 2,642 மருத்துவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கியதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதால், பணி ஆணை வழங்கப்பட்ட மருத்துவர்களை எங்கு நியமனம் செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறது.

பொதுமக்கள் உயிர் குறித்துச் சிறிதும் அக்கறையின்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். உண்மையில் மருத்துவர்கள் பணி நியமனம் நடைபெற்றதா அல்லது வழக்கம்போல கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா திமுக அரசு?" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சமூக ஆர்வலருக்கு இப்படியா விதி முடியனும்? விபத்தில் நேர்ந்த சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thoothukudi #tamilnadu #annamalai #bjp #Pregnant Woman Death #கர்ப்பிணி பெண் மரணம் #தூத்துக்குடி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story