தமிழகமே அதிர்ச்சி.. பெண்ணுக்கு மது கொடுத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. நெல்லையில் பயங்கரம்.!
தமிழகமே அதிர்ச்சி.. பெண்ணுக்கு மது கொடுத்து கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. நெல்லையில் பயங்கரம்.!

ஜெபம் செய்ய சென்றிருந்த பெண்மணிக்கு மதுபானத்தை குளிர்பானத்தில் கலந்துகொண்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மானுர், வெங்கலப்பொட்டல் பகுதியில் வசித்து வருபவர் குமரேசன். இவரின் மகன் சுபாஷ் (வயது 37). இவர் திருநெல்வேலியில் இரயில்வே ஊழியராக வேலை பார்க்கிறார். புதுச்சேரியில் வசித்து வரும் 29 வயது இளம்பெண்ணுக்கு, இவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சம்பவத்தன்று நெல்லைக்கு ஜெபக்கூட்டத்தில் பங்கேற்க இளம்பெண் வருகைதந்த நிலையில், சுபாஷ் அவரை தொடர்புகொண்டு பேசி இருக்கிறார். மேலும், வண்ணாரப்பேட்டையில் இருக்கும் விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி.. இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய 40 வயது பெண், 4 பேர் கும்பலால் கற்பழிப்பு.!
கூட்டுப்பாலியல் வன்கொடுமை
சுபாஷின் வீட்டில் சுபாஷ் மற்றும் அவரின் நண்பரான அரசுப்பேருந்து ஓட்டுநர் முருகேஷ் (வயது 37) ஆகியோர் இருந்துள்ளனர். விபரீதத்தை உணர்ந்த பெண் தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில், இளம்பெண்ணை வீட்டுக்குள் அடைத்து வைத்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
கூட்டுப்பாலியல் பலாத்காரத்தை எதிர்கொண்ட பெண்மணி, அங்கிருந்து தப்பி நெல்லை தாலுகா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அதிகாரிகள் முருகேஷ், சுபாஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: மாமனார் - மாமியார் வெட்டிக்கொலை; திருநெல்வேலியை நடுங்க வைத்த இரட்டைக்கொலை.!