இன்னும் எத்தனை உயிர்கள்? நெல்லையில் நடந்த கொலை விவகாரம்; கடும் அண்ணாமலை கண்டனம்!
இன்னும் எத்தனை உயிர்கள்? நெல்லையில் நடந்த கொலை விவகாரம்; கடும் அண்ணாமலை கண்டனம்!

திருநெல்வேலி மாநகர பகுதியில் வசித்து வந்த ஜாகிர் உசேன் என்பவர், இன்று காலை பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வந்தார். அப்போது மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவரின் உடலை மீது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மறைந்த ஜாகிர் உசேன், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவிலும் பணியாற்றி இருக்கிறார். தற்போது, ஓய்வுக்கு பின்னர் ரியல் எஸ்டேட், மிர்த்திம் ஜார்கான் தர்காவில் அறங்காவலராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே, நிலம் தொடர்பான தகராற்றில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. ஆனால், உசேன் வக்பு வாரிய சொத்துக்கள் முறைகேடு விஷயத்தை கண்டறிந்ததாகவும், அதனால் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் உறவினர்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர்.
இதையும் படிங்க: #Breaking: அண்ணாமலை கைது.. டாஸ்மாக் ஊழல் ரூ.40000 கோடி.. A1 குற்றவாளி முக ஸ்டாலின் - பரபரப்பு பேட்டி.! தமிழக அரசியலில் திடுக்.!
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில், கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, "திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி திரு. ஜாகிர் உசேன், காலையில் தொழுகை முடித்து வரும் வழியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பணி ஓய்வுக்குப் பிறகு, சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வந்த அவர், வக்பு வாரிய நிலங்களை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்துக் குரல் கொடுத்ததை அடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல்கள் இருந்து வந்ததாக, சில நாட்களுக்கு முன்பு அவர் பேசிய காணொளி வெளியாகியிருக்கிறது.
ஒரு ஓய்வு பெற்ற காவல் அதிகாரிக்கே கொலை மிரட்டல் விடுத்து, அவரைப் படுகொலை செய்யுமளவுக்குத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. சாமானிய மக்களின் புகார்களைக் காவல்துறை கண்டுகொள்வதில்லை. திமுக அரசை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. இந்த கையாலாகாத திமுக அரசால், இன்னும் எத்தனை உயிர்களைப் பலி கொடுக்கப் போகிறோம்?" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: தொடை நடுங்கி திமுக - அண்ணாமலை கடும் கண்டனம்.. பாய்ச்சல்.!