#Breaking: திருப்பூரில் மீண்டும் பயங்கரம்.. தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி படுகொலை.!
#Breaking: திருப்பூரில் மீண்டும் பயங்கரம்.. தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி படுகொலை.!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி, துலுக்கமுத்தூர், ஊஞ்சபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 84). இவரின் மனைவி பர்வதம் (வயது 70). தம்பதிகள் தோட்டத்து வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இவர்களின் குழந்தைகளுக்கு திருமணம் முடிந்து, தங்களின் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் தோட்டத்தில் தம்பதி மட்டும் தனியாக தங்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: பேரனுக்கு திருமணம் முடிந்ததும் பாட்டி விபத்தில் மரணம்; கட்டுப்பாட்டை இழந்த காரால் 2 மூதாட்டிகளுக்கு நேர்ந்த துயரம்.!
இன்று இவர்கள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியே வராத நிலையில், பக்கத்து தோட்டத்தில் இருப்பவர் சந்தேகப்பட்டு சென்று பார்த்தபோது, அங்கு இருவரும் சடலமாக இருந்தனர்.
தம்பதி கொலை
இதனையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதா? என சோதனை நடைபெறுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லடம் தோட்ட வீட்டில் முதிய தம்பதி, அவரின் மகன் என 3 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனிடையே, மீண்டும் அதே பாணியில் கொலை நடந்துள்ளது.
இதையும் படிங்க: ஹிந்தி திணிப்பை உறுதி செய்தால் ரூ.99 இலட்சம் பரிசு.. திருப்பூர் பாஜக அறிவிப்பு.!