திருப்பூர்: 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; கணித ஆசிரியர் போக்ஸோவில் கைது.!
திருப்பூர்: 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; கணித ஆசிரியர் போக்ஸோவில் கைது.!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், கணித ஆசிரியர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிக்குட்பட்ட பள்ளியில், சுமார் 1100 க்கும் அதிகமான மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் 7 ம் வகுப்பில் சிறுமி ஒருவர் பயின்று வருகிறார்.
இதையும் படிங்க: பிராங்க் பெயரில் மிரட்டல்.. கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. வாட்சப்பில் ஆடியோ வெளியிட்டு சோகம்.!
இவருக்கு, பள்ளியில் பணியாற்றி வரும் கணித ஆசிரியர் சுந்தர வடிவேலு என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை
பின் இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளிக்கப்படவே, அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். கடந்த வாரம் இந்த சம்பவம் நடைபெற்றது.
காவல் நிலையத்தில் புகார்
புகாரைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் துறை ரீதியான விசாரணையை முன்னெடுத்திருந்த நிலையில், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போக்ஸோவில் கைது
அதிகாரிகள் தேடியபோது சுந்தர வடிவேலு தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு சென்றது உறுதி செய்யப்படவே, அவரை தேடிச் சென்ற அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து திருப்பூர் அழைத்து வந்தனர்.
அவரிடம் தொடர்ந்து வீரபாண்டி காவல்நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் தொடர்ந்து சுந்தர வடிவேலுவை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அசிங்கமா கண்டக்டர் திட்டுறாரு.. புகார் சொன்ன மாணவன்.. அதிரடி காட்டிய அமைச்சர் சிவசங்கர்.!