திருவண்ணாமலை: அரசு கொடுத்த நிலத்துக்கு உரிமை கோரி தகராறு; லாரி ஏற்றி இளைஞர் படுகொலை..!
திருவண்ணாமலை: அரசு கொடுத்த நிலத்துக்கு உரிமை கோரி தகராறு; லாரி ஏற்றி இளைஞர் படுகொலை..!

நிலத்தகராறில் இளைஞர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் செய்யாறு அருகே நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம், வடகல்பாக்கம், வாழவந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவரின் மனைவி அலமேலு. தம்பதிகளுக்கு 32 வயதுடைய திருப்பதி என்ற மகன் இருக்கிறார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தற்போது வரை திருமணம் முடியவில்லை.
இதையும் படிங்க: கடன் தொல்லை கழுத்தை நெரித்ததால் சோகம்; 3வது மனைவியுடன் கணவர் விபரீதம்..! இருவரும் மரணம்.!
மேற்கூறிய குடும்பத்திற்கு சொந்தமாக நிலம், வீடு இல்லை. இதனால் வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வடகல்பாக்கம் கிராமத்திலேயே வழங்கப்பட்டது. அரசு வழங்கிய இடத்துக்கு, அதே கிராமத்தில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவரின் மகன் புண்ணியகோட்டி (வயது 32) உரிமை கொண்டாடி வந்துள்ளார்.
மேலும், பல ஆண்டுகளாக நாங்கள் பயன்படுத்தி வரும் நிலம் எங்களுக்கே என்பதால், திருப்பதி குடும்பத்தினர் வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் குறித்து இருதரப்பு முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருப்பதி குடும்பத்திற்கு கொடுக்கப்பட்ட நிலத்தை சமன் செய்ய, புண்ணியகோட்டி லாரியில் மண் எடுத்து வந்தார்.
லாரி ஏற்றி கொலை
இந்த தகவலை அறிந்த திருப்பதி, அவரின் தாய் அலமேலு, உறவினர்கள் சென்று தட்டிக்கேட்டனர். அப்போது, புண்ணியகோட்டி, அவரின் தந்தை வெங்கடேசன் தகாத வார்த்தால் திட்டி இருக்கின்றனர். பிரச்சனை செய்தால் லாரியை விட்டு ஏற்றி கொலை செய்வோம் எனவும் மிரட்டி இருக்கின்றனர்.
ஒருகட்டத்தில் புண்ணியகோட்டி திருப்பதியின் மீது லாரியை வைத்து மோத, படுகாயமடைந்த திருப்பதி சம்பவ இடத்திலேயே மரணித்தார். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், திருப்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து புண்ணியகோடியை கைது செய்தனர். வெங்கடேசனுக்கு வலைவீசப்பட்டுள்ளது.
தலைப்பு படம்குற்றவாளி புண்ணியகோடி / திருவண்ணாமலை இரயில் நிலையம்
இதையும் படிங்க: திருவண்ணாமலை: கூலித்தொழிலாளி வாகனம் மோதி பலி; நொடியில் நேர்ந்த சோகம்.!