கண்ணுல கலர், நாக்க வெட்டு.. ஏலியன் உலகமான திருச்சி?.. டாட்டூ கலைஞர் கைது.!
கண்ணுல கலர், நாக்க வெட்டு.. ஏலியன் உலகமான திருச்சி?.. டாட்டூ கலைஞர் கைது.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலசிந்தாமணி பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஹரிஹரன். இவர் பாடி மாடிஃபிகேஷன் கல்ச்சர் என்ற பெயரில், டாட்டூ சென்டரை சொந்தமாக நடத்தி வந்துள்ளார்.
இவர் பார்க்க ஏலியன் போல கண்களில் வண்ணம் தீட்டி, நாக்கை அறுத்தும் காட்சி தந்துள்ளார். தன்னைப்போல பலருக்கும் அறுவை சிகிச்சை செய்து வந்துள்ளார்.
சுயமாக சிகிச்சை
இந்த விஷயம் தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகவே, மருத்துவ கட்டுப்பாட்டினை மீறி செயல்பட்ட ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: 50 துண்டாக பெண்ணை கறி போட்டு, கறிக்கடைக்கார இளைஞர் செய்த பகீர் செயல்.! விசாரணையில் அம்பலமான உண்மைகள்.!
இந்த விஷயம் தொடர்பாக திருச்சி மலைக்கோட்டை காவல் துறையினர், 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் சார்பில் டாட்டூ சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அட பாவமே... பீடி துண்டால் பறி போன உயிர்.!! முதியவருக்கு நேர்ந்த சோக முடிவு.!!