மகனை அழைத்துவர ஆவலுடன் சென்றபோது விபரீதம்; பாரதிதாசன் பல்கலை., பேராசிரியர் விபத்தில் பலி.!
மகனை அழைத்துவர ஆவலுடன் சென்றபோது விபரீதம்; பாரதிதாசன் பல்கலை., பேராசிரியர் விபத்தில் பலி.!
தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் பேராசிரியர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், பேராசிரியராக வேலை பார்த்து வருபவர் பிரசன்னா (வயது 47). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி, மகன் இருக்கிறார். பிரசன்னாவின் மகன் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில் பயின்று வருகிறார்.
மகனை அழைத்துவரச்சென்றபோது சோகம்
சம்பவத்தன்று, பிரசன்னா மகனை அழைத்து வர இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில், கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, கழுதூர் பகுதியில் சென்றுகொண்டு இருந்தார். அச்சமயம், தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் இரும்பு தடுப்பில் எதிர்பாராத விதமாக மோதினார்.
இதையும் படிங்க: நாமக்கல்: தேசிய நெடுஞ்சாலையில் வால்கிங்.. 2 பெண்கள் உட்பட 3 பேர் ஆம்னி வேன் மோதி மரணம்.!
விபத்தில் பலி
இந்த சம்பவத்தில் நிலைதடுமாறி சாலையில் விழுந்தவர், படுகாயமடைந்து உயிருக்கு துடிதுடித்து நிகழ்விடத்திலேயே இறந்துபோனார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து பிரசன்னாவின் உடலை மீட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வேப்பூர் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக ரிவர்ஸ்; அடிச்சி தூக்கிய லாரி.. 10 பேர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள்.!