திருச்சி: 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; இரட்டை சகோதரர்கள் போக்ஸோவில் கைது, எலும்பு முறிவு.!
திருச்சி: 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்; இரட்டை சகோதரர்கள் போக்ஸோவில் கைது, எலும்பு முறிவு.!

சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியில் இருக்கும் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ஹரிஷ், ஹரிஹரன். இவர்கள் 25 வயதுடைய இரட்டை சகோதரர்கள் ஆவார்கள். கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர்.
இதே பகுதியில் இரண்டு சிறுமிகள் வசித்து வரும் நிலையில், சிறுமிகளை கடந்த மார்ச் 2, 3 ம் தேதிகளில் தங்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற சகோதரர்கள், பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இதையும் படிங்க: திருச்சி: "என் பொண்டாட்டி பிரிஞ்சு போயிட்டா" - ரவுடி எடுத்த விபரீத முடிவு.. தூக்கிட்டு தற்கொலை.!
பாலியல் வன்கொடுமை
இந்த விஷயம் தொடர்பாக சிறுமிகளின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையைத் தொடர்ந்து இரட்டை சகோதரர்கள் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருச்சி - நாமக்கல் சாலையில், செவந்தலிங்கபுரம் பாலம் பகுதியில் வாகனம் சென்றது.
எலும்பு முறிவு
அப்போது, சகோதரர்கள் இருவரும் அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட நிலையில், இருவரும் கீழே விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் இருவரையும் மீட்டு மாவுக்கட்டுக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த துயரம்.. வீடுபுகுந்து அத்துமீறல்.!