அம்மா, 4 தங்கையை அறுத்துக்கொன்றது ஏன்? 24 வயது இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்..!
அம்மா, 4 தங்கையை அறுத்துக்கொன்றது ஏன்? 24 வயது இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்..!
நிலத்தை அக்கம் பக்கத்தினர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கும் நிலையில், குடும்பத்தின் எதிர்காலத்திற்காக அவர்களை கொலை செய்ததாக 24 வயது இளைஞர் தெரிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ராவைச் சேர்ந்த குடும்பத்தினர், லக்னோவுக்கு சென்று அறையெடுத்து தங்கி இருந்தனர். அங்கு தாயுடன் தங்கியிருந்த 4 சகோதரிகளை, அர்ஷத் என்ற 24 வயது இளைஞர் கொலை செய்தார்.
இதையும் படிங்க: மனைவி, மாமியாரை கொன்று சாவகாசமாக கட்டிலில் உட்கார்ந்து போஸ்; பதறவைக்கும் சம்பவம்.!
மணிக்கட்டை அறுத்துக்கொலை
தாய், தங்கைகளுக்கு உணவில் மதுகலந்து கொடுத்து, அவர்கள் உறங்கியதும் மணிக்கட்டுகளை பிளேடால் அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், உயிரிழந்த நபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அர்ஷத்திடம் நடந்த விசாரணையில் தாய் ஆஷிமா, சகோதரிகள் அர்சத் (24), ஆலியா (9), அல்சியா (19), அக்சா (16), ரெஹ்மீன் (18) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரிக்கையில், அர்ஷத் குடும்ப சண்டையில் அனைவரையும் கொலை செய்ததாக கூறினார்.
ஆக்கிரமிப்பை எதிர்த்து விபரீதம்
மேற்படி அவர் எந்த தகவலையும் தெரிவிக்காத நிலையில், அர்ஷத் பதிவு செய்த வீடியோ வெளியாகியது. அந்த வீடியோவில், தனது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை அக்கம் பக்கத்தினர் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறார்கள். எங்களை அடித்து விரட்டுகிறார்கள்.
எனது தந்தையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்கையை விற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது? கடந்த 15 நாட்களாக தெருவில் நாங்கள் உறங்கியபோது யாருமே எங்களை காப்பாற்ற, உதவ முன்வரவில்லை. இதனால் இம்முடிவை எடுக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அர்ஷத்தின் தந்தைக்கு வலைவீச்சு
மத்திய-மாநில அரசு குறித்தும் சில தகவலை பதிவு செய்தவர், தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருந்துள்ளார். அதற்குள் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுவிட்டனர். இதனிடையே, தந்தை மீது அர்ஷத் குற்றசாட்டு முன்வைத்து இருப்பதால், அவரை தேடி அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழகமே அதிர்ச்சி.. இயற்கை உபாதைக்கு ஒதுங்கிய 40 வயது பெண், 4 பேர் கும்பலால் கற்பழிப்பு.!