வேலூர்: இரயில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை; குற்றவாளி கழிவறையில் வழுக்கியதால் எலும்பு முறிவு.!
வேலூர்: இரயில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை; குற்றவாளி கழிவறையில் வழுக்கியதால் எலும்பு முறிவு.!
கர்ப்பிணி பெண்ணுக்கு நபர் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் கால் தற்போது முறிந்துள்ளது.
ஆந்திரபிரதேசம் மாநிலத்தில் வசித்து வரும் இளம்பெண், திருப்பூரில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவில் பெண் ஊருக்கு கோவை - திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் சென்றபோது, ஹேமராஜ் என்ற நபரால் ஜோலார்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து பாலியல் தொல்லையை எதிர்கொண்டார்.
கர்ப்பிணி பெண் பாலியல் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பெண்ணை கீழே தள்ளி கொலை செய்ய முயற்சிக்கப்பட்டார். தற்போது பெண்மணி முகம், கை, காலில் பலத்த காயம் அடைந்து வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். ஹேமராஜும் அவரின் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: வேலூரில் ஓடும் இரயிலில் பெண் பலாத்கார முயற்சி; தேசிய மகளிர் ஆணையம் நோட்டிஸ்..!
கழிவறையில் வழுக்கி விழுந்தார்
இந்நிலையில், குற்றவாளி ஹேமராஜ் விசாரணையின் போது கழிவறையை பயன்படுத்தச் சென்ற நிலையில், அங்கு கால் இடறி விழுந்தார். இதனால் வலியால் அவர் அலறிய நிலையில், விரைந்து சென்ற காவல்துறையினர் ஹேமராஜை மீட்டனர்.
மேலும், உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்ட நிலையில், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, ஹேமராஜை காவல்துறையினர் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அங்கு அவருக்கு காலில் எலும்பு முறிவு போடப்பட்டது. ஹேமராஜின் மீது காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஓடும் இரயில் பலாத்கார முயற்சி.. உயிருக்கு போராடும் கர்ப்பிணி பெண் நடுங்கவைக்கும் வாக்குமூலம்.!