தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குற்றவாளியை பிடிக்கச் சென்ற காவலர் மயங்கி விழுந்து பலி.. விழுப்புரத்தில் சோகம்.!

குற்றவாளியை பிடிக்கச் சென்ற காவலர் மயங்கி விழுந்து பலி.. விழுப்புரத்தில் சோகம்.!

in Vilupppuram cop Died  Advertisement


விழுப்புரம் மாவட்டம், கயத்தூர் கிராமத்தில் ரோந்துப் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த விக்கிரவாண்டி காவல்நிலைய தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார். 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்துவந்த சீனுவாசன் (வயது 40), நேற்று (16.3.2025) விடியற்காலை சக காவலர் மஞ்சுநாதன் என்பவருடன் தொரவி கிராமத்தில், விக்கிரவாண்டி - புதுச்சேரி மாநில நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். 

Viluppuram

காவலர் பலி

அப்போது, சந்தேகப்படும்படியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களில் இரண்டு நபர்களை சக காவலருடன் மடக்கிப்பிடித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பின்னர் தப்பியோடிய மூன்றாவது நபரை பிடிப்பதற்காக கயத்தூர் கிராமத்தில் தேடிவந்து, கயத்தூர் சுடுகாடு அருகே அந்த மூன்றாவது நபரை விரட்டிப் பிடிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்தார். 

இதையும் படிங்க: பேருதான் தமிழ்மணி.. கையில நோ மணி.. கட்சி நிகழ்ச்சிக்கு கடைகடையாக மிரட்டல் வழிப்பறி.. லீக்கான வீடியோ.!

முதல்வர் இரங்கல்

தலைமைக் காவலர் சீனுவாசனை, சககாவலர் உடனடியாக  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தலைமைக் காவலர் சீனுவாசன் உயிரிழந்தார். தலைமைக் காவலர் சீனுவாசனின் அர்பணிப்புடன் கூடிய பணியை பாராட்டியுள்ள தமிழ்நாடு முதல்வர், அவரின் இழப்பால் வாடும் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க: செஞ்சி: துக்க வீட்டுக்கு வந்த கணவன்-மனைவி, மகளுக்கு அரசுப் பேருந்து வடிவில் வந்த எமன்; மூவரும் சம்பவ இடத்திலேயே பலி..!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viluppuram #tamilnadu #Latest news #விழுப்புரம் #தமிழ்நாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story