கணவனை இழந்த கைம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்று தானும் தற்கொலை.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
கணவனை இழந்த கைம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்று தானும் தற்கொலை.. விழுப்புரத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
குழந்தையுடன் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கண்டநல்லூரில் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரங்கண்டநல்லூர், மணம்பூண்டி, தெய்வீக நகரில் வசித்து வருபவர் சத்யா. இவர் கணவரை இழந்து, தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். குடும்ப வறுமை காரணமாக, அங்குள்ள வீடுகளில் பணிப்பெண்ணாக, கிடைக்கும் வேலையை செய்து வந்துள்ளார்.
கத்தியால் குத்திக்கொலை
இதனிடையே, சம்பவத்தன்று சத்யா தனியாக நடந்து வந்துகொண்டு இருந்தார். அச்சமயம், அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அவரை சரமாரியாக கத்தியால் குத்தி தனது காரில் தப்பிச் சென்றார். இதனைக்கண்டு அதிர்ந்துபோன மக்கள், காரை துரத்திச் சென்றனர்.
இதையும் படிங்க: சாக்கு மூட்டையில் சடலமாக மைக்செட் ஊழியர்; ஸ்ரீவில்லிபுத்தூரில் பகீர் சம்பவம்.!
தானும் தற்கொலை
அப்போது, மணம்பூண்டி கிராமத்தில் உள்ள சாலையில், கார் மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கி நின்றது. இதனால் மக்கள் தன்னை பிடித்துவிடுவார்கள் என அச்சப்பட்டவர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மேலும், கத்தியால் தன்னைத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார்.
பறிபோனது உயிர்
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர் முருகன் என்பது உறுதியாக, அவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை
இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், முருகன் எதற்காக சத்யாவை கொலை செய்தார்? இருவருக்கும் என்ன பழக்கம்? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தங்கையை காதலித்த இளைஞர் வெட்டிக்கொலை; சமாதானம் பேச அழைத்து கொடூரம்.. இன்ஸ்டா காதல் பயங்கரம்.!