கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி பலி.. விழுப்புரத்தில் சோகம்.!
கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுமி பலி.. விழுப்புரத்தில் சோகம்.!
யுகேஜி படிக்கச் சென்ற மகள் சடலமாக வீடு திரும்பிய சோகம் குடும்பத்தையே உலுக்கி இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள கழிவுநீர் தொட்டியில், மூன்றரை வயதுடைய குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
யு.கே.ஜி பயிலும் சிறுமி
விக்ரவாண்டியில் உள்ள செயின்ட் மேரிஸ் தனியார் பள்ளியில், மூன்றரை வயதுடைய சிறுமி லியா லட்சுமி, யுகேஜி பயின்று வந்துள்ளார். இதனிடையே, இன்று சிறுமி பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
இதையும் படிங்க: கிண்டி: மதுபோதையில் தண்டவாளத்தில் அலட்சியம்; நண்பர்கள் இருவர் பலி.!
உறவினர்கள் போராட்டம்
அப்போது, கழிவுநீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குழந்தை பலியான சம்பவத்தால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குழந்தை பலிக்கு நீதி கேட்டும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் பலிக்கு காரணமான அலட்சிய அலுவர்களை கைது செய்யக்கோரியும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 12 வயது சிறுவனுக்கு ஊஞ்சலில் காத்திருந்த எமன்; பீரோ விழுந்து துடிதுடித்து மரணம்.!