சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம்; 25 வயது இளைஞருக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.!
சிறுமி கடத்தப்பட்டு பலாத்காரம்; 25 வயது இளைஞருக்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், சேத்தூர், ஆதி திராவிடர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் முத்துமணி (வயது 25). இவர் கடந்த 2020ல், அதே பகுதியில் வசித்து வந்த சிறுமியிடம், ஆசை வார்த்தை கூறி கடத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
நீதிமன்றம் விசாரணை
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சேத்தூர் காவல்துறையினர், முத்துமணியை கைது செய்தனர். இவ்விவகாரம் தொடர்பான வழக்கு திருவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
தண்டனை
20 ஆண்டுகள் சிறை :இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பகவதியம்மாள், சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த குற்றவாளியான முத்துமணிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிவகாசி: நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து சோகம்; தாய்-மகன் பரிதாப பலி.! மழையால் நடந்த சோகம்.!
இதையும் படிங்க: இனிப்பில் விஷம்..எமனாக மாறிய தாய், தந்தை.. இப்படி ஒரு காரணமா.?!