விருதுநகர்: அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்; அகழாய்வு இயக்குனர் விளக்கம்.!
விருதுநகர்: அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருள்; அகழாய்வு இயக்குனர் விளக்கம்.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், வெம்பக்கோட்டை, விஜயகரிசல்குளம் கிராமத்தில் சுமார் 5 ஆயிரமாண்டுகளுக்கு முன்பு, நுண் கற்காலத்தை அறியும் வகையிலான அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன.
வைப்பாற்றின் வடக்கு கரையில், மேட்டக்காடு பகுதியில் மூன்றாம்கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த ஜூன் மாதம் 18 ம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இங்கு முன்னதாக கண்ணாடி மணிகள், கல்மணிகள், சூது பவள கல் மணிகள், சங்கு வளையல், பழங்கால பெண்ணின் தலைப்பகுதி கிடைத்தது.
கூம்பு வடிவ குவளை
மேலும், கிபி 16 ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் கால செம்பு காசுகள், அணிகலன்கள், காளை உருவம் உட்பட 1800 பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், தற்போது சுடுமணலால் தயார் செய்யப்பட்ட கூம்பு வடிவிலான குவளை கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: அருப்புக்கோட்டை: கார் - டூவீலர் மோதி பயங்கர விபத்து; எலக்ட்ரீசியன் பரிதாப பலி.!
இந்த குவளையை அங்கு வசித்து வந்த மூதாதேயர்கள் உணவு அருந்த அல்லது மண்டபத்திற்கான மூடியாக அதனை பயன்படுத்தி இருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கரன் உறுதி செய்துள்ளார்.
இதையும் படிங்க: திருமணம் ஆகாமலேயே கர்ப்பமான மகள்; உண்மையை அறிந்து தாய் விபரீதம்.. பறிபோன உயிர்.!