கோவை: "மகனைத்தேடி நாங்களும் போறோம்" - கடிதம் எழுதிவைத்து தம்பதி விபரீதம்.. சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!
கோவை: மகனைத்தேடி நாங்களும் போறோம் - கடிதம் எழுதிவைத்து தம்பதி விபரீதம்.. சடலமாக மீட்கப்பட்ட சோகம்.!
காய்ச்சலால் மகன் உயிரிழந்த காரணத்தால், தம்பதிகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சோகம் கோவையில் நடந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் வசித்து வருபவர் பழனிச்சாமி (வயது 39). இவரின் மனைவி வத்சலா (வயது 35). தம்பதிகளுக்கு 7 வயதுடைய சுரேஷ் என்ற மகன் இருக்கிறார். கடந்த மார்ச் மாதத்தில் காய்ச்சலால் அவதிப்பட்ட சுரேஷ், ஏப்ரல் மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: மதுபழக்கத்தை கண்டித்த மனைவி; தீக்குளித்து உயிரைவிட கணவன்.!
மகன் இறந்ததால் வருத்தம்
தங்களின் குழந்தையை இழந்த வருத்தத்தில், தம்பதிகள் எப்போதும் சோகமாகவே இருந்து வந்துள்ளனர். பழனிச்சாமியின் சொந்த அண்ணன் முருகேசன், கோவை மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகனை இழந்த தம்பதி வேதனையில் வாடுவதை பார்த்தவர், இருவரையும் வேடப்பட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
விடுதி அறையில் விபரீதம்
அங்கு பழனிச்சாமி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். வத்சலா தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த நவம்பர் 3ம் தேதி காந்திபுரம் பகுதியில் இருக்கும் விடுதிக்கு தம்பதி சென்று அறையெடுத்து தங்கியது.
உடல் மீட்பு
பின் நேற்று அறையில் இருந்து யாரும் வெளியே வராததால், விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நேரில் வந்த அதிகாரிகள் கதவை திறந்து உள்ளே சென்றபோது, இருவரும் வாயில் நுரைதள்ளி சடலமாக இருந்தனர். பின் இருவரின் உடலையும் மீட்டு அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடிதம் சிக்கியது
அறையில் சோதனை செய்தபோது தம்பதிகளின் கடிதமும் கைப்பற்றப்பட்டது. அந்த கடிதத்தில், "எங்களின் அன்பு மகன் சுரேஷ் இல்லாத வாழ்க்கை, எங்களால் நினைத்து பார்க்க இயலாத ஒன்று. கடந்த 7 ஆண்டுகளாக அவனுடன் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம். அவன் இல்லாத ஒவ்வொரு நிமிடமும் வருடமாகிறது. அவனுடன் நாங்கள் செல்கிறோம் அவனைத்தேடி" என எழுதப்பட்டு இருந்தது.
இதனால் தம்பதிகள் மகன் இறந்த துக்கத்தில் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கனவாய் போன வெளிநாட்டு வேலை.. கழுத்தை நெரித்த கடன் தொல்லை.!! வாலிபரின் சோக முடிவு.!!