கோடை வெயிலுக்கு டாட்டா... தென் மேற்கு பருவ மழை வரப்போகுது... இந்திய வானிலை மையம் அறிவிப்பு.!
கோடை வெயிலுக்கு டாட்டா... தென் மேற்கு பருவ மழை வந்தாச்சு... இந்திய வானிலை மையம் அறிவிப்பு.!
மக்களை வாட்டி வதைக்கும் வெயிலுக்கு நல்ல செய்தியாக தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்க போவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டு இருக்கிறது. மேலும் இரண்டு புயல்கள் உருவாகப் போவதாகவும் அது அபாய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
எந்த வருடமுமில்லாத அளவிற்கு கோடை வெயிலின் தாக்கம் இந்த வருடம் கடுமையாக இருந்து வருகிறது. கோடை வெயிலின் வெப்பத்தினால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் ஜூன் நான்காம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை உருவாவதற்கான சூழல்கள் நிலவி வருவதாகவும் ஜூன் மாதம் நான்காம் தேதியில் இருந்து ஐந்தாம் தேதி வரை அந்த பகுதிகளில் மழை பெய்ய கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டு இருக்கிறது.
மேலும் ஜூன் 5-ம் தேதியிலிருந்து தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி உருவாக உள்ளதாகவும் ஜூன் 7ஆம் தேதி தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகவுள்ளதாகவும் இதன் காரணமாக கடும் புயல் மற்றும் மலை ஏற்படலாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டு இருக்கிறது.