#Breaking: இந்திய முப்படை தலைமை தளபதி, மனைவி உட்பட 11 பேர் மரணம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
#Breaking: இந்திய முப்படை தலைமை தளபதி, மனைவி உட்பட 11 பேர் மரணம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 பேர் குன்னூர் விமான விபத்தில் உயிரிழந்தனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்ஸ்டன் இராணுவ முகாமுக்கு, இந்திய முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத், பிரக் எல்.எஸ் லிட்டர், ஹர்ஜிந்தர் சிங், குர்சேவாக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹாவ் சட்பால் ஆகிய 9 பேர் செல்லவிருந்தனர். இவர்கள் வரும் தகவல் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் பேரில் சாலை மார்க்கமாக இவர்கள் குன்னூர் வெலிங்ஸ்டன் இராணுவ முகாமுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
ஆனால், இராணுவ ஹெலிகாப்டர் ஐ.ஏ.எப் எம்.ஐ. 17 வி 5 உதவியுடன் திடீரென ஹெலிகாப்டரில் புறப்பட்டுள்ளனர். இவர்கள் பயணித்த நேரத்தில் பனிமூட்டம் சூழ்ந்திருந்த நிலையில், குன்னூரில் தரையிறங்க வாய்ப்புகள் இல்லாததால், மீண்டும் ஹெலிகாப்டர் கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு மீண்டும் திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.
காலை 10.30 மணியளவில் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டரில் 2 விமானிகள், 9 இராணுவ கமாண்டோக்கள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். விபத்து குறித்த தகவல் அறிந்த தமிழக முதல்வர் மீட்பு பணிகளில் விரைந்து செயல்பட உத்தரவிட்டு, இன்று மாலை கோவை வழியாக குன்னூருக்கு செல்லவுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இராணுவ தலைமை அதிகாரிகளும் தமிழகத்திற்கு வந்துகொண்டு இருக்கின்றனர்.
தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபுவும் குன்னூருக்கு வந்துகொண்டு இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தமிழகம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 03.30 மணியளவில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேரின் சடலம் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
இந்நிலையில், மாலை 5 மணியளவில் ஏ.என்.ஐ நிறுவனம் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துவிட்டதாக அறிவித்த நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய விமானப்படை பிபின் ராவத் மரணத்தை உறுதி செய்துள்ளது. பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 11 பேர் அதிகாரபூர்வமாக உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.