×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனாவால் தமிழக காவல்துறையில் முதல் உயிரிழப்பு! இன்ஸ்பெக்டருக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர்!

inspector died by corona

Advertisement

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருக்கும் சென்னையில் பொதுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிகமாகி வருகிறது.

இந்தநிலையில், சென்னை மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு கடந்த 5-ம்தேதி காய்ச்சல் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி விடுதியில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமானதையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து பாலமுரளி இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் எடப்படி பழனிசாமி, இன்ஸ்பெக்டர் பாலமுரளி மறைவு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பாலமுரளியை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். மேலும், பாலமுரளி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#police inspector #corona #died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story