17 வயது மனைவியின் தலையை துண்டித்து வீதிஉலா சென்ற கணவன்.. பகீர் சம்பவத்தால் அதிர்ந்துபோன மக்கள்.!
17 வயது மனைவியின் தலையை துண்டித்து வீதிஉலா சென்ற கணவன்.. பகீர் சம்பவத்தால் அதிர்ந்துபோன மக்கள்.!
பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக மனைவியின் தலையை துடித்து தெருவில் கணவன் உலா வந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது.
ஈரான் நாட்டில் உள்ள அஹ்வாலிஸ் நகரை சேர்ந்த 17 வயது பெண், தனது கணவருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்த நிலையில், கணவர் தனது இளம் மனைவியின் தலையை வாளால் துண்டித்து வீதியில் நடந்து சென்றார்.
இந்த விஷயம் தொடர்பாக பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு நடந்த விசாரணையில், தனது மனைவி விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததால், அவரை கொலை செய்தேன் என கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, கொலைக்கு உடந்தையாக இருந்த அவரின் தம்பியையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
கணவர் தனது மனைவியின் தலையுடன் தெருவில் சென்ற வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் கண்டனத்தை பெற்று வருகிறது. ஈரானில் பெண்களின் அதிகாரப்பூர்வ திருமண வயது 13, ஆண்களின் திருமண வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது.