தமிழின் சிறப்பை நாட்டின் பிற பகுதிகள் அறியாதது வருத்தமளிக்கிறது; ஆளுநர் ஆர்.என்.ரவி..!
தமிழின் சிறப்பை நாட்டின் பிற பகுதிகள் அறியாதது வருத்தமளிக்கிறது; ஆளுநர் ஆர்.என்.ரவி..!

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், தர்பார் அரங்கில் சிவில் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் 44 பேர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இப்போது பேசிய ஆளுநர் ரவி பணிவாகவும், உறுதியாகவும் செயல் பட்டு சிறப்பான பணியை செய்யுங்கள் என்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் தமிழ்நாட்டில் பணியாற்றுவதன் மூலம் தான் அறியாத பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் என்றும், தமிழ் மொழியை கற்று வருவதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் இருக்கும் பழங்கால கோயில்களில் உள்ள கட்டிடக்கலை கிரேக்க கட்டிடக்கலையை தோற்கடிக்கும் வகையில் சிறப்பாக உள்ளது என குறிப்பிட்ட ஆர்.என்.ரவி தமிழரின் கலாச்சாரம் அறிவு எந்த அளவு மகத்தானது என்பதை இது காட்டுகிறது என்று கூறினார்.
மேலும் நம் நாட்டின் பிற பகுதிகள் தமிழின் சிறப்பை அறியாதது வருத்தம் அளிக்கிறது என்றும், நாட்டின் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அந்த மாநிலத்தின் மொழியை கற்றுக் கெள்ளுமாறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஆளுநர் ரவி அறிவுரை வழங்கினார்.