×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள்! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

IT raid in velammal schools

Advertisement


தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமம். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தேனி, கரூர்,  சிவகங்கை, மதுரை போன்ற மாவட்டகளில் இந்த வேலம்மாள் கல்வி குழுமம் இருந்து வருகிறது. 

இந்நிலையில், இந்த கல்வி குழுமத்தில் அரசு நிர்ணயித்த கட்டத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து மதுரை வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கல்வி குழுமத்துக்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் 4 நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், வேலம்மாள் மருத்துவக்கல்லூரியில் நடைபெற்ற சோதனை தொடர்பாக வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வேலம்மாள் நிறுவனம், ரூ.532 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமானவரித்துறை சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.2 கோடி பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெற்றோர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#velammal #raid
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story