நான் அரசியலுக்கு வந்ததற்கு அவர்தான் காரணம்! இது உரிமைக்கான போராட்டம்! ஜெ.தீபா அதிரடி குற்றசாட்டு!
J. Deepa explain the reason why she want vedha illam
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேலும், வேதா நிலையத்தில் உள்ள அசையும், அசையா சொத்துக்களையும் அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில் இதுதொடர்பான நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும். ஜெயலலிதா பயன்படுத்திய சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்கவேண்டுமென கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் ஜெ.தீபா தரப்பின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அத்துடன் தீபா தொடர்ந்த இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெ.தீபா கூறியதாவது:-
ஜெயலலிதா சொத்துக்களை அடையும் எண்ணம் எனக்கில்லை. நான் நடத்துவது சொத்துக்கான போராட்டம் இல்லை. உரிமைக்கான போராட்டம். உங்களுக்கு என்ன வேண்டுமென எனது அத்தை பல முறை என்னிடம் கேட்டுள்ளார் ஆனால் நாங்கள் அதை நிராகரித்து வந்தோம். என்னால் போயஸ் இல்லத்திற்கு செல்ல முடியாததற்கு சசிகலாதான் காரணம். அவரது குடும்பத்தினரால் பலமுறை அவமானபட்டுள்ளேன்.
ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்ம யுத்தத்தால் தான் எல்லோருக்கும் தலைவலி ஏற்பட்டது. எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஓ.பன்னீர் செல்வம். நான் தேவையின்றி அரசியலுக்கு வந்ததற்கு காரணம் ஓபிஸ் தான் என கூறியுள்ளார்.