பொங்கல் பரிசு தொகுப்பிற்காக கரும்பு கொள்முதல்; நேரில் சென்ற கூட்டுறவுத் துறை செயலாளர்..!
பொங்கல் பரிசு தொப்பிற்காக கரும்பு கொள்முதல்;நேரில் சென்ற கூட்டுறவுத் துறை செயலாளர்..!
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுடன் கரும்பு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பில் கரும்பு இல்லையென்ற அறிவிப்பால் கரும்பு விவசாயிகள் பெரும் மனவேதனை அடைந்தனர்.
அதன் பிறகு அவர்கள் போராட்டங்களை நடத்தி தற்சமயம் அரசு கரும்பை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்தது. பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கரும்பு கொடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
இந்த நிலையில் கரும்பை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய நிதியும், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ய அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், வேளாண் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், உள்ளிட்ட குழுக்களை நியமித்துள்ளது.
கரும்புக்கு உண்டான அதிகபட்ச போக்குவரத்து செலவுகள் உட்பட ஒரு கரும்பிற்கு ரூ.33 என்றும், அதற்காக மொத்தமாக ரூபாய் 72.38 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது. இன்று கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் செப்பதனிருப்பு பகுதியில் கரும்பு விவசாயிகளிடம் நேரடியாக சென்று நேரடியாக ஆய்வு நடத்தியுள்ளார்.