தமிழகம் வந்தடைந்த சசிகலா.! அதிமுகவில் உள்ள சில எட்டபர்கள்.! அமைச்சர் ஜெயக்குமார் கொந்தளிப்பு.!
அதிமுகவில் உள்ள சில எட்டபர்கள் களையெடுக்கப்பட வேண்டியவர்கள் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உள்ள சில எட்டபர்கள் களையெடுக்கப்பட வேண்டியவர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான சசிகலா, நேற்று காலை கார் மூலம் சென்னை புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார். இந்தநிலையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், அ.தி.மு.க-வுக்கும் சசிகலா தரப்பினருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க உறுப்பினர்கள் இல்லை. அதனால் அவர்கள் அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.
வரலாற்றில் வீரத்தையும், ஆளுமையும் பேசிய அதே நேரத்தில், எட்டப்பர்களையும் பேசி இருக்கிறோம். அதிமுக கட்சியில் உள்ள எட்டப்பர்கள் களையெடுக்கப்பட வேண்டும். உடம்பில் அதிமுக இரத்தம் ஓடாதவர்கள் தான் இப்படி செயல்படுவார்கள். கட்சிக்குள் மிகக் குறைவான அளவிலேயே இத்தகைய நபர்கள் உள்ளனர் என தெரிவித்தார்.
வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும். சசிகலாவை இணைக்கவோ, அதிமுக-அமமுக இணையவோ 100% வாய்ப்பில்லை. அதிமுகவில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமை நிர்வாகிகள் ஒருமித்த கருத்துடன் உள்ளனர் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.