×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜெயலலிதாவின் சர்ச்சைக்குரிய சிலை மாற்றம்!. புதிய சிலையை திறந்து வைக்கிறார் முதல்வர்!.

jeyalalitha new statue opened today

Advertisement


கடந்த பிப்ரவரி மாதம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று அவரது  7 அடி உயர வெண்கல சிலை அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். 

அக்கட்சி தொண்டர்களே சிலையைப் பார்த்து, யார் இது என்று கேட்கும் அளவிற்கு முகம் மாறுதல் அடைந்து காணப்பட்டது. சிலர் வளர்மதி போன்று இருப்பதாகவும், முதலமைச்சர் பழனிசாமியின் மனைவி போன்று இருப்பதாகவும் கேலி செய்தனர். 

 எனவே இந்த சிலை ஜெயலலிதா போன்று இல்லை என அதிமுகவினர்களே அதிருப்தி அடைந்ததை அடுத்து புதிய சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று புதிய சிலை வைக்கப்படவுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின், புதிய சிலை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் , திறக்கப்பட உள்ளது.

முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த புதிய சிலையை இன்று காலை 9.15 மணிக்கு திறந்து வைக்கவுள்ளனர். 

இதனால் இன்று அதிமுகவினர் பலர், இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வரவுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#jeyalalitha #statue #ops and eps
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story