யாருக்கெல்லாம் இ-பதிவுமுறை அவசியமில்லை தெரியுமா.? காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு.!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு வருகிற 24-ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்திய பிறகும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், மேலும் ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல மற்றும் மாவட்டத்துக்குள் அவசர பயணத்துக்காக இ-பதிவு சான்று பெறும் முறை நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், நேற்று தமிழகம் முழுவதும் இ-பதிவு ஆவணங்களைக் கோரி காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், ஊடகவியலாளர்களிடையேயும் இ-பதிவு ஆவணங்களைக் கோரி காவல்துறையினர் கட்டாயப்படுத்தியுள்ளனர். இந்தநிலையில், காவல்துறைத் தலைவர் திரிபாதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் அவர்களுடைய சொந்த அடையாள அட்டையப் பயன்படுத்தி மாநிலம் முழுவதும் பயணம் செய்துகொள்ளலாம். இ-பதிவு தேவையில்லை' என அறிவித்துள்ளார்.