7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை.! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.!
7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை.! நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.!
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். குடிபோதைக்கு அடிமையான லாரி ஓட்டுனர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு மதுபோதையில் தனது மனைவியிடம் தகராறு செய்து மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.
இதனையடுத்து அவரது மனைவி, தனது மகனுடன் தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் வீட்டில், 2-ஆம் வகுப்பு படித்து வந்த இவா்களது 7 வயது மகள் மட்டும் தூங்கிக் கொண்டிருந்தாா். அப்போது, மதுபோதையிலிருந்த லாரி ஓட்டுநா் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கடலுாா் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி நேற்று தீா்ப்பளித்தாா். அதில், லாரி ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் மனம், உடல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிா்காலம், மறு சீரமைப்பை கருத்தில் கொண்டு இழப்பீடாக ஏற்கனவே ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.4.75 லட்சத்தை 30 நாள்களுக்குள் மாவட்ட நிா்வாகத்திடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.