முற்றுகிறதா இபிஎஸ் Vs செங்கோட்டையன் மோதல்? கூட்டத்தை தவிர்த்து அதிரடி.!
முற்றுகிறதா இபிஎஸ் Vs செங்கோட்டையன் மோதல்? கூட்டத்தை தவிர்த்து அதிரடி.!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 - 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல், இன்று நடைபெற்றது. சட்டப்பேரவை அறிவிப்புகளை மக்கள் தெரிந்துகொள்ள மொத்தமாக 932 இடங்களில், சிறப்பு காணொளி நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று பல்வேறு புதிய திட்டங்களும் மக்களுக்காக அறிவிக்கப்பட்டன.
கூட்டத்தை தவிர்த்தார்
இந்நிலையில், சட்டப்பேரவை தொடங்கும் முன்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அதிமுக எம்.எல்.ஏ & முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பின் நேரடியாக அவர் அவைக்குள் வந்தார். இதனால் அதிமுக வட்டாரத்தில் மறைமுக சலசலப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: #JustIN: "வருமுன் காப்பதும் இல்லை- பட்டும் திருந்துவது இல்லை" - எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்.!
கோவையில் ஆரம்பித்து சென்னையிலும் தொடருகிறது.
ஏற்கனவே கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு விழா எடுத்த நிகழ்ச்சியில் அதிமுக தலைவர்கள் இல்லை என்ற காரணத்தால், கூட்டத்தில் பங்கேற்காமல் செங்கோட்டையன் ஒதுங்கினார். அதனைத்தொடர்ந்து, சில எதிர்மறை கருத்துக்கள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தினை செங்கோட்டையன் புறக்கணித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: #Breaking: உச்சகட்ட கொந்தளிப்பில் இபிஎஸ் - பாத்துக்கலாம்.. முக ஸ்டாலினுக்கு சவால்.!