காதலனை பிரிந்த காதலி.! ஆத்திரத்தில் காதலன் செய்த செயலால் காதலி எடுத்த விபரீத முடிவு..!
Kadhalani pirintha kadhalai athirathil kadhalan saitha viparitha sayal
நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் ஊராட்சி ராதாநல்லூரைச் சேர்ந்த கலியமூர்த்தி. இவருக்கு சுபஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுபஸ்ரீ அதே பகுதியை சேர்ந்த உதய் பிரகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
ஆனால் சில நாட்கள் கழித்து காதலர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்ப்படவே சுபஸ்ரீ உதய் பிரகாஷை பிரிந்துள்ளார். காதல் பிரிவை தாங்க முடியாத உதய் பிரகாஷ் ஆத்திரத்தில் தனது காதலியுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் பேஸ்புக்கில் பதிவிட்டதுடன், சுபஸ்ரீயின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டும், சுபஸ்ரீ மற்றும் அவரது கர்ப்பிணி சகோதரியையும் உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சுபஸ்ரீ தீக்குளித்துள்ளார். உடனே அவரை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி சுபஸ்ரீ இறந்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.