சென்னையில் வேலையை காட்ட துவங்கிய கஜா! தஞ்சை, புதுகையில் விவசாயிகள் ஏமாற்றம்
kaja starts in chennai but not in thanjai and pudugai
தமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் புதுச்சேரி மற்றும் கடலூர் அல்லது, நாகை முதல் வேதாராண்யம் இடையே இன்று மாலை முதல் இரவுக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கஜா புயல் மேகக்கூட்டங்களுடன் மிக அழகாக, மேற்கு தென் மேற்காக நகர்ந்து வருகிறது. கஜா புயல் இன்று இன்னும் தீவிரமாகி தீவிரப்புயலாக மாறும். ஆனால், தமிழகக் கரையைக் கடக்கும் முன் அதாவது கடலூர் முதல் வேதாரண்யத்துக்கு இடையே கடக்கும் முன் கஜா புயல் வலுவிழக்கக்கூடும்.
இன்று கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்றுவீசக்கூடும், சில நேரங்களில் காற்று 90கி.மீ வேகத்தில் கூட வீச வாய்ப்புண்டு. கஜா புயல் சென்னையை நோக்கி நகர வாய்ப்பில்லை என்று அறிவித்துள்ளது.
'கஜா' புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது.வங்கக் கடலில் உருவாகி உள்ள 'கஜா' புயல் இன்று கரையை கடக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் சென்னை அதன் சுற்றுவட்டார பகுதிகளான கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டு தாங்கல், வடபழனி, வளசரவாக்கம்,போரூர், வண்டலூர், அம்ப்தூர், குன்றத்தூர், மாங்காடு, காட்டுப்பாக்கம், ஆவடி, ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
ஆனால் பெரிதும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட தஞ்சை, புதுகை, நாகை மாவட்டங்களில் மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லை என விவசாயிகள் வருத்தத்தில் உள்ளனர்.