சாமி தீர்த்தம் குடித்து, ஹாஸ்பிடலில் அனுமதி.! சாமியார் போட்ட பலே திட்டம்.!
சாமி தீர்த்தம் குடித்து, ஹாஸ்பிடலில் அனுமதி.! சாமியார் போட்ட பலே திட்டம்.!
சென்னையில் இருந்து வந்த சாமியார்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலத்திற்கு அருகே அம்மகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் சென்னையை சேர்ந்த முரளி என்பவர் தான் ஒரு சாமியார் என கூறிக்கொண்டு அவரது வீட்டிற்கு வந்து, வீட்டில் ஒரு பகுதியில் கோயில் கட்டி அவர்களுடன் வசித்து வந்துள்ளார். அந்த சாமியாரை பார்க்க அப்பகுதியில் இருக்கும் பலரும் வந்து சென்றுள்ளனர்.
லட்சக்கணக்கில் கடன்
சாமியாரிடம் பழக்கப்பட்ட நபர்களிடம் லட்ச கணக்கில் அவர் பணம் பெற்றுள்ளார். இதில் கணேசனும் உடந்தை என்று கூறப்படுகிறது. கணேசனுக்கு அந்த பணத்தை வாங்கி தரச் சொல்லி பல்வேறு தரப்பில் இருந்தும் நெருக்கடி வந்துள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை தனக்கு சாமி வந்ததாக கூறி சாமியார் முரளி சாமியாடி கணேசன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் எழுப்பி தீர்த்தம் என்று கூறி ஒரு திரவத்தை கொடுத்து அனைவரையும் சாப்பிட வைத்து தானும் அருந்தியுள்ளார்.
இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பிரசவம்; லிப்ட் கொடுப்பதாக இளைஞன் அதிர்ச்சி செயல்.!
மயங்கி விழ வைத்த தீர்த்தம்
குடித்த சற்று நேரத்தில் அனைவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பரிசோதனையில் அதிர்ச்சி
சிலைகளை சுத்தப்படுத்தக்கூடிய ரசாயனத்தை தான் அந்த சாமியார் முரளி தண்ணீரில் கலந்து கொடுத்துள்ளார் என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. கணேசன் குடும்பத்தினருடன் சேர்ந்து முரளி இறந்து போக நினைத்து இவ்வாறு செய்தாரா? அல்லது வேறு காரணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "6 சென்ட் இடத்துக்கு அநியாயமா உசுரு போச்சே... " நில தகராறில் தம்பி படுகொலை.!! அண்ணன், அண்ணி வெறி செயல்.!!