அரசு பேருந்து - கார் அடுத்தடுத்து மோதல்... உளுந்தூர்பேட்டையில் கோர விபத்து.!
அரசு பேருந்து - கார் அடுத்தடுத்து மோதல்... உளுந்தூர்பேட்டையில் கோர விபத்து.!
விழுப்புரம் - கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி சுங்கச்சாவடிக்கையை கடந்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டு இருந்தது. இதே சாலையில் வெவ்வேறு ஊர்களுக்கு பயணித்த கார்களும் சென்றன.
இந்த நிலையில், கார்களுக்கு முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த கார் ஓட்டுனரும் பிரேக் போட்டுள்ளார். இதனால் அடுத்தடுத்து 3 கார்கள் மோதிக்கொண்ட நிலையில், காருக்கு பின்னால் வந்த அரசு பேருந்தும் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் பயணம் செய்தவர்களுக்கு லேசான காயம் மட்டுமே ஏற்பட்ட நிலையில், அவர்கள் அவசர ஊர்தி உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். திடீரென நடந்த விபத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.