ஹிஜாப் விவகாரம்.. அங்கு நடப்பது தமிழ்நாட்டுக்கு வந்துவிடக் கூடாது.! கமல்ஹாசன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!
ஹிஜாப் விவகாரம்.. அங்கு நடப்பது தமிழ்நாட்டுக்கு வந்துவிடக் கூடாது.! கமல்ஹாசன் என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப் புராவில் ஒரு கல்லூரியில் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு பதிலடியாக இந்து மாணவிகள் காவி துண்டு அணிந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒரு கல்லூரியில் இந்துத்துவா மாணவர்களுக்கும் இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இஸ்லாமிய மாணவிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் காயம் அடைந்த நிலையில் இரண்டு இந்துத்துவா மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி மோதல்காரர்களை விரட்டி அடித்தனர்.
அங்கு இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷம் எழுப்பியுள்ளனர். ஆனால் அந்த மாணவி அவர்களை பார்த்து அஞ்சாமல் அல்லாவு அக்பர் என சத்தமாக கூறினார். மாணவர்கள் இப்படி மோதி கொள்ளும் சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது." எனப் பதிவிட்டுள்ளார்.