பொதுமொழி ஆங்கிலம் தான்.. எதார்த்தமாக பேசிய கமல்ஹாசன்!
kamalhasan talk about launguage
எந்த நாடாக இருந்தாலும் ஒரு பொதுவான மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. இந்தி மொழியை திணித்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் சரி வட இந்தியாவிலும் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்தகமல்ஹாசன் பொது மொழி குறித்த கேள்விக்கு ரஜினியின் கருத்தில் இருந்து மாறுபட்டுள்ளார், அவர் கூறுகையில் " என் தாய்மொழி மீது கை வைக்காத வரை அவர்கள் கருத்துக்கள் ஏற்கப்படும். ஆனால் தாய்மொழி மீது கைவைத்தால் மன்னிக்கப்படாது.
ஏற்கனவே பொதுவான மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. எதோ விபத்தின் மூலம் கிடைத்த மொழியாக ஆங்கிலம் இருந்தாலும் நன்மையாக அமைந்தது. அடிமையாக இருந்த போதிலும் ஆங்கிலத்தை வைத்து நாம் வேறு கருவி செய்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.