14 வயது சிறுமியை காதலிப்பதாக நடித்து 3 மாத கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவர்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
14 வயது சிறுமியை காதலிப்பதாக நடித்து 3 மாத கர்ப்பிணியாக்கிய கல்லூரி மாணவர்.. காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்.!
உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது பகீர் தகவல் அம்பலமானது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புள்ளானூர் கிராமத்தில் வசித்து வரும் 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாக இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மயங்கி விழுந்துள்ளார். பெற்றோர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது, மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் மூன்று மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வரவே, பெற்றோர்கள் அதிர்ச்சியுடன் விசாரித்துள்ளனர். பின்னர், இது குறித்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்த விசாரணையில், கோவிந்தபாடி அகரம் கிராமத்தைச் சார்ந்த லோகநாதன் என்பவர், சிறுமியிடம் நெருங்கி பழகி இருக்கிறார். இவர் காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.ஏ முதல் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின் நாட்களில் காதலாக மாற, இதனால் இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். இறுதியில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார் என்பது உறுதியானது. இதனையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கல்லூரி மாணவர் லோகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.