#சற்றுமுன்: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடித்து சிதறிய விவகாரம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!
#சற்றுமுன்: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடித்து சிதறிய விவகாரம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.!
மறுஉத்தரவு வரும் வரையில் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள், குடோன்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுவதாக காஞ்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை, நேற்று காலை 11 மணியளவில் வெடித்து சிதறி ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசின் சார்பில் ரூ.3 இலட்சமும், மத்திய அரசின் சார்பில் ரூ.2 இலட்சமும் நிதிஉதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 வெடிபொருள் குடோன்களில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக வெடிபொருள் குடோன் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குடோன் மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் பணியை உடனடியாக நிறுத்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டு இருக்கிறார். மறுஉத்தரவு வரும் வரையில் எந்த ஊழியர்களும் பணியாற்ற கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு நடத்தப்பட்டு உத்தரவு வழங்கப்பட்ட பின்னரே பணிகள் தொடங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.