காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து விவகாரம்.. மேலும் பலி எண்ணிக்கை உயர்வு..!!
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து விவகாரம்.. மேலும் பலி எண்ணிக்கை உயர்வு..!!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குருவிமலை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு 9பேர் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 17 பேர் கை, கால்களை இழந்து மருத்துவமனையில் அபாயகட்டத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தனர். இவர்களுக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சையளித்து வந்த நிலையில், நேற்று இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனால் பலி எண்ணிக்கை 12-ஆக உயர்ந்தது. இந்த நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரவி என்பவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.