தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தங்கையின் தோழியுடன் காதல்.. காதலியை மீட்டு தர காதலன் எஸ்.பி ஆபிசில் புகார்.!

தங்கையின் தோழியுடன் காதல்.. காதலியை மீட்டு தர காதலன் எஸ்.பி ஆபிசில் புகார்.!

Kanchipuram Love Boy Complaint SP Office about Rescue my Love Girl from his Family Advertisement

பிசினஸ் பார்ட்னராக இருந்த தங்கையின் தோழியை காதலித்த இளைஞர், காதலியை மீட்டு தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் பிரதாப் என்ற ஜோஸ்வா. இவரின் தங்கை கலா. கலாவின் தோழி சுவேதா. கலா மற்றும் சுவேதா சேர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தேரடி தெருவில் குருவில்லா துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்கள். 

தனது தங்கையின் கடைக்கு அவ்வப்போது வந்த சென்ற ஜோஸ்வா சுவேதாவுடன் பழக தொடங்கியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு, பின்னாளில் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் சுவேதாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. 

இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சுவேதாவின் பெற்றோர், மகளுக்கு வேறொரு மணமகன் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளனர். இந்த தகவலை சுவேதா காதலருக்கு தெரிவிக்க, அவர் தனது குடும்பத்துடன் சென்று சுவேதாவை தனக்கு திருமணம் செய்து வையுங்கள் என பெண் கேட்டுள்ளார். 

kanchipuram

அப்போது, இருதரப்பு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஜோஸ்வாவின் வீட்டாரை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக கடந்த பிப். 4 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், சுவேதாவை பிரதாப்புக்கு திருமணம் செய்து தருவதை விட, அவளை கொலை செய்துவிடலாம் என பெற்றோர் உறவினருடன் பேசியதாக சுவேதா காதலனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் காதலியை மீட்டு தரவேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பிரதாப் புகார் அளித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kanchipuram #tamilnadu #Love #sriperumbudur #complaint #SP Office #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story