மறைந்த ரௌடி ஸ்ரீதரின் அக்கா மகன் கொடூர கொலை; மதுபோதையில் தீர்த்துக்கட்டிய நண்பர்கள்.. 7 மாதம் கடந்து எலும்புக்கூடு மீட்பு.!
மறைந்த ரௌடி ஸ்ரீதரின் அக்கா மகன் கொடூர கொலை; மதுபோதையில் தீர்த்துக்கட்டிய நண்பர்கள்.. 7 மாதம் கடந்து எலும்புக்கூடு மீட்பு.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லவர்மேடு பகுதியில் வசித்து வருபவர் கிரிதரன் (வயது 30). இவர் மறைந்த ரௌடி ஸ்ரீதர் தனபாலன் அக்கா மகன் ஆவார் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த சம்பவம் குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நலயில், தற்போது அவரின் நண்பர்களால் கிரிதரன் கொலை செய்யப்பட்டது உறுதியானது.
சம்பவம் குறித்து பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த ஆகாஷ், கார்த்திக், ஹரிஷ், தாமோதரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களின் வாக்குமூலத்தின் பேரில் புதுப்பாளையம் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டின் கிணற்றில் இருந்த கிரிதரனின் உடல் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது.
கிட்டத்தட்ட 7 மாதங்கள் கடந்து கிரிதரனின் கொலை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் கிரிதரன் மதுபானம் அருந்தியபோது, இவர்களுக்குள் யார் பெரியவர்? என்ற வாக்குவாதம் எழுந்து கிரிதரன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கிரிதரனின் நண்பர்கள் போதையில் மேற்கூறிய சம்பவத்தை உலறிவிட, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கிரிதரனின் கொலைக்கான மர்மம் விலகவே, அப்பகுதியில் லேசான பதற்ற சூழல் நிலவி வருவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.