சிஐடி வந்தால் என்ன ஆகும்? சாம்சங்கை எதிர்பார்க்கும் பிற மாநிலங்கள்.. காஞ்சி போராட்டத்தில் இப்படியொரு பின்புலமா?.!
சிஐடி வந்தால் என்ன ஆகும்? சாம்சங்கை எதிர்பார்க்கும் பிற மாநிலங்கள்.. காஞ்சி போராட்டத்தில் இப்படியொரு பின்புலமா?.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிரந்தர தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர்.
அனைத்து கோரிக்கைகளையும் நிறுவனத்தின் தரப்பு ஏற்றுக்கொண்டாலும், சிஐடி தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என போராட்டம் தொடருகிறது. இதனால் சாம்சங் நிறுவனத்தின் உற்பத்திகள் தொடர்பு பாதிப்பை சந்தித்துள்ளன.
இதையும் படிங்க: சாம்சங் தொழிலாளர்கள் பயணித்த வாகனம் விபத்து: காவலரை தள்ளிவிட்ட ஊழியர்கள்.. பகீர் வீடியோ.!
விசிக, சிபிஐஎம் நேரில் ஆதரவு:
குறைவான பணியாளர்களை கொண்டு தொடர்ந்து நிறுவனம் இயங்கி வரும் நிலையில், இன்று அரசின் ஆலோசனையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு சிபிஐஎம், விசிக உட்பட இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனிடையே தங்களின் நிறுவனம் தேவையானதை எங்களுக்கு செய்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிரந்தர பணியாளர்களுக்கு எங்களில் இருந்து பன்மடங்கு ஊதியம் உயர்வு. இருப்பினும் அவர்கள் கேட்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறுவனம் ஏற்றுக்கொண்டுவிட்டது.
எங்கோ ஒரு கிராமத்தில் நாங்கள் ஒருவேளை சோற்றுக்காக போராடி, இன்று எங்களின் குடும்பத்தை கவனித்து வருகிறோம். ஆனால், அவர்களோ பல விஷயங்களை முன்வைத்து போராடி வருகிறார்கள். இதில் சிஐடி அங்கீகாரம் கேட்கிறார்கள் என தெரிவித்தனர்.
இந்த விஷயம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கருத்து தெரிவித்தபோது, பலகோடிகள் தொகையை முதலீடு செய்து, வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு தேவையான விஷயங்களையும் செய்கிறது.
நோக்கியா, பின்னி மில் நிலைமை
இவ்வாறான சிஐடி அங்கீகாரம் வேண்டும் எனக்கேட்டு, அதனை அங்கீகரித்தல் அவர்கள் சொல்வதே சட்டம் என்ற நிலை நிறுவனத்திற்குள் வந்துவிடும். வாரிசுதாரர்கள் கைகாண்பிக்கும் நபர்களுக்கு பணியில் தொடங்கி, பணிஓய்வு வரை மிகப்பெரிய தலைவலி பிரச்சனை உண்டாகும். பின்னி மில், நோக்கியா போன்ற பெருநிறுவனங்கள் ஒருகாலத்தில் சென்னையின் அடையாளமாக இருந்தவை.
அவைகள் இங்கிருந்து வெளியேற சிஐடி தலையீடு மிகப்பெரிய காரணம். எதற்கெடுத்தாலும் போராட்டம், வேலை நிறுத்தம் என பணியே நடைபெறாது. சாம்சங் போன்ற பெருநிறுவனங்களை வரவேற்க ஒவ்வொரு மாநிலமும் ஆவலாக காத்திருக்கிறது. இதேநிலை தொடர்ந்து பாதிப்பை சந்தித்தால், அவர்கள் எளிய முறையில் இருந்து வெளியேறி சென்றுவிடுவார்கள்.
இதனால் நிரந்தர பணியாளர்களுக்கு இழப்பீடு என தொகை கிடைக்கும். அவர்கள் அல்லாமல் ஒப்பந்த ரீதியாக வேலை பார்ப்போரின் நிலை சிரமம். இவர்கள் அனைவரும் வெளியேறி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அந்நிலை உருவாகாமல் இருக்க தமிழ்நாடு அரசு முயலுகிறது எனினும், சூழ்நிலையை பொறுத்தே அவர்களின் எதிர்காலம். சிஐடி ஊழியர்களின் நலனை காக்க முன்வருகிறோம் என்ற பெயரில், வேறொருவரின் வாய்ப்புகளை பறிக்க காரணமாக அமையும்.
நோக்கியா, பின்னி மில் உட்பட பல நிறுவனங்கள் சிஐடி-யால் மூடப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் விமர்சனம்
சாம்சங் நிறுவனம் தான் விபத்தில் சிக்கியபோது இலட்சக்கணக்கில் இன்சூரன்ஸ் பணம் செலுத்தி சிகிச்சைக்கு வழிவகுத்ததாக நிறுவன பணியாளர் பெருமிதம்
தங்களின் நிறுவனத்தால் அடைந்த பெருமைகளை எடுத்துரைக்கும் பெண்கள்
இதையும் படிங்க: கோக்கில் கிடந்தது என்ன? சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. உயிர் பயத்தில் இளைஞர்.!