ரூ.81 ஆயிரம் மதிப்புள்ள டிரோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு டாய் கார் அனுப்பி மோசடி.. பகீர் சம்பவம்.!
ரூ.81 ஆயிரம் மதிப்புள்ள டிரோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு டாய் கார் அனுப்பி மோசடி.. பகீர் சம்பவம்.!
டிரோன் ஆர்டர் செய்த இளைஞருக்கு டாய் கார் அனுப்பிய சம்பவம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்துள்ளது.
நமக்கு தேவையான பொருட்களை கடைகளுக்கு சென்று வாங்கிய காலங்கள் மலையேறி, இன்றளவில் எது வேண்டும் என்றாலும் இணையவழியில் அதனை ஆர்டர் செய்து வருகிறோம். இதில், ப்ளிப்கார்ட், அமேசான் உட்பட பல இணையவழி ஷாப்பிங் செயலிகள் இருக்கின்றன.
இவற்றில் சில நேரங்களில் மக்கள் தாங்கள் ஆர்டர் செய்யும் பொருளுக்கு பதிலாக மோசடி செய்வோர் தங்களின் திருட்டு செயலை அரங்கேற்றி வருகின்றனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்ந்த இளைஞர் ரூ.81 ஆயிரம் மதிப்புள்ள டிரோன் கேமராவை ஆர்டர் செய்துள்ளார்.
நேற்று அவருக்கு ஆர்டர் செய்த பொருள் கிடைத்த நிலையில், அதனை பிரித்து பார்த்த வாடிக்கையாளருக்கு பேரதிர்ச்சி காத்திருந்துள்ளது. ஆம், அவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக, மோசடி நபர்கள் குழந்தைகள் விளையாடும் காரை அனுப்பி வைத்துள்ளனர். இந்த விஷயம் குறித்து இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.