சாக்லேட் கொடுத்தது தப்பா,. கண்டித்ததால் 2வது மாடிக்கு ஓடிச்சென்று கீழே குதித்த மாணவன்..! அதிர்ந்த பள்ளிநிர்வாகம்..!!
சாக்லேட் கொடுத்தது தப்பா,. கண்டித்ததால் 2வது மாடிக்கு ஓடிச்சென்று கீழே குதித்த மாணவன்..! அதிர்ந்த பள்ளிநிர்வாகம்..!!
11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் பள்ளியின் 2வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 46-வது வார்டில் பிரபல தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஈசிகாந்த் என்ற மாணவன் இப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளான்.
இவர் நேற்று மாலை தன்னுடன் படிக்கும் மாணவிக்கு சாக்லேட் கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த பள்ளி நிர்வாகம் மாணவனை அலுவலக அறைக்கு அழைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் 2வது மாடிக்கு ஓடிச்சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி ஈடுபட்டுள்ளான்.
உடனடியாக மாணவனை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் மாணவனின் கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், மூக்கில் ரத்தம் வெளியேறியதால் 108 மருத்துவ ஊர்தியின் மூலமாக சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காஞ்சிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.