போராட்டம் நடத்த சென்ற திமுகவினர்.! தடுத்து நிறுத்திய போலீசார்.! திமுக எம்பி கனிமொழி சாலையில் அமர்ந்து தர்ணா.!
பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த சென்ற திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உடன் தொடா்பில் இருந்ததாக பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் ஹேரோன் பால், பாபு ஆகியோரை சிபிஐ போலீஸாா் கடந்த 5 ஆம் தேதி கைது செய்தனா்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுகவினர் உள்பட அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும் 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொள்ளாச்சியில் திமுக மாநில மகளிரணி செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்காக திமுக எம்பி கனிமொழி மற்றும் திமுகவினர் கோவையில் இருந்து புறப்பட்டனர். அப்போது கற்பகம் கல்லூரி அருகே வந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கனிமொழி மற்றும் திமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.