55 கிமீ வேகத்தில் வீசும் சூறைக்காற்று; கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவு.!
55 கிமீ வேகத்தில் வீசும் சூறைக்காற்று; கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவு.!
ஆகஸ்ட் 04 ம் தேதியான இன்று முதல் 08 ம் தேதி வரை வங்கக்கடல், அரபிக்கடல் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று 55 கி.மீ வேகம் வரை வீசலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், குமரி ஆட்சியர் மீனவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் நலன் கருதி, மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற்றுலாப்பயணிகள் கடற்கரையோரம் செல்லவும் தடை வித்தியாக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அப்படிப்போடு; குடை எடுத்துட்டு வெளியே போனீங்களா?.. 10 மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை மழை..!
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
இதுகுறித்த அறிவிப்பில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் ஆகஸ்ட் 04 ம் தேதியான இன்று முதல் ஆகஸ்ட் 07 ம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.
மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள்ளும், சுற்றுலா பயணிகள் கடற்கரையோரம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலில் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேவையான இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனைவியுடன் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அடுத்த கணமே விபரீதம்.. கண்ணீரில் மனைவி.!