கேரளாவில் ஒருவரை கொன்றால் பழிக்கு பழி.. தமிழ்நாட்டில்., சர்ச்சை பேச்சால் அ.இ.பா.இ.மா. தலைவர் கைது.!
கேரளாவில் ஒருவரை கொன்றால் பழிக்கு பழி.. தமிழ்நாட்டில்., சர்ச்சை பேச்சால் அ.இ.பா.இ.மா. தலைவர் கைது.!
மதக்கலவரத்தை தூங்கும் விதமாக பேசிய இந்து அமைப்பு தலைவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுக்கடை கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவிற்கு, கடந்த 17 ஆம் தேதி வருகை தந்த அகில இந்திய பாரத இந்து மகா மாநில தலைவர் பால சுப்பிரமணியம் உள்ளரங்கத்தில் உரையாற்றினார். அப்போது, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, இந்துக்களை பாதுகாப்பது நமது கடமை.
கேரளாவில் ஒருவரை வெட்டி கொலை செய்தால், பழிக்கு பழியாக இன்னொருவரை வெட்டி கொலை செய்வார்கள். அப்படி தமிழகத்தில் நடைபெற கூடாது என பேசியிருந்தார். இந்த பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும், வன்முறையை தூண்ட முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து, புகாரை ஏற்றுக்கொண்ட காவல் அதிகாரிகள் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ஈத்தாமொழி இல்லத்தில் இருந்த பால சுப்பிரமணியத்தை அதிரடியாக நேற்று காலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.