மதுபோதையில் அலட்சியம்.. இரயில் தண்டவாளத்தில் நடந்து உடல் சிதறி கொத்தனார் சாவு.!
மதுபோதையில் அலட்சியம்.. இரயில் தண்டவாளத்தில் நடந்து உடல் சிதறி கொத்தனார் சாவு.!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருவிக்கரை, மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுஜர்சிங் (வயது 45). இவர் கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் தங்கியிருந்து கொத்தனாராக பணியாற்றி வருகிறார். இதனால் வாரம் ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து சென்றுள்ளார்.
நேற்று வேலை முடிந்ததும் ஊருக்கு புறப்பட சுஜர்சிங் தயாராகிய நிலையில், சுஜர்சிங் மற்றும் அவரின் நண்பர்கள் 4 பேர், மங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் பரசுராம் அதிவிரைவு இரயிலில் குழித்துறைக்கு வருகை தந்துள்ளனர்.
குழித்துறை இரயில் நிலையத்தில் 4 பேரும் இறங்கிய நிலையில், சுஜர்சிங் தவிர்த்து பிற நண்பர்கள் தங்களின் வீட்டிற்கு சென்றுள்ளனர். சுஜர்சிங் மதுபானம் அருந்தியிருந்த நிலையில், குழித்துறை - நாகர்கோவில் இரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார்.
அந்த சமயத்தில், புனலூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் இரயில் தண்டவாளத்தில் வர, அபாய ஒலியை எஞ்சின் ஓட்டுநர் எழுப்பியும் பலனில்லை. இதனால் இரயில் மோதி தூக்கி வீசப்பட்ட சுஜர்சிங், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். இந்த விஷயம் தொடர்பாக இரயில் எஞ்சின் ஓட்டுநர் நாகர்கோவில் இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இரயில் மோதியதில் கை, கால்கள் துண்டான நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பிற உடல் பாகங்கள் இரயிலுடன் சேர்ந்து பயணித்து, 6 கி.மீ தூரம் வரை சென்றுள்ளது. அதனையும் அதிகாரிகள் மீட்டனர்.